பொலிஸ் பொதுமக்கள் நிவாரண பிரிவை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஆலோசனை !
கடந்த காலங்களில் நிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் பொதுமக்கள் நிவாரணப் பிரிவை
மீள ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆலோசனை
வழங்கியுள்ளார்.
இதன்படி, அரச விடுமுறை தினத்தைத் தவிர ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும்
முற்பகல் 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பொதுமக்கள் முறைப்பாடுகளை
முன்வைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலக்கம் 140 சேர் சிற்றம்பலம் ஏ கார்டினர் மாவத்தை கொழும்பு – 2 என்ற
முகவரியில் அமைந்துள்ள பொலிஸ் தலைமையகத்தில் பொதுமக்கள் நிவாரணப்
பிரிவு இயங்கவுள்ளது.
தங்களது முறைப்பாடுகளுக்கு அமைய பொலிஸ் நிலையங்கள் மற்றும் விசாரணைப்
பிரிவுகளில் எதிர்பார்த்த தீர்வு கிடைக்காதவர்கள் பொலிஸ் பொதுமக்கள் நிவாரணப்
பிரிவு ஊடாக பொலிஸ் மா அதிபர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் முறையிட முடியும்
என அறிவிக்கப்பட்டுள்ளது.