இஸ்ரேலின் மேற்குக் கரை தாக்குதலில் 18 பேர் பலி !
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் உள்ள துல்கரம் அகதி முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய உள்ளக பாதுகாப்பு சேவையான ஷின் பெட்டுடன் ஒருங்கிணைந்து நேற்று முன்தினம் (03) இரவு இந்தத் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டது.
எனினும் பல பொதுமக்கள் கூடியிருந்த தேனீர் கடை ஒன்றின் மீதே இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக பலஸ்தீன அதிகாரசபையால் நடத்தப்படும் வபா செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
இதனால் பலரும் காயமடைந்திருப்பதாக அந்த செய்தி நிறுவனம் கூறியது. இந்தத்
தாக்குதலில் முஹமது அபூ சஹ்ரா, அவரது மனைவி மற்றும் இரு குழந்தைகள் என ஒரே குடும்பத்தின் நால்வர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்திகள் தெரிவித்துள்ளன.
காசாவில் கடந்த ஆண்டு ஒக்டோபரில் போ ர் வெடித்தது தொடக்கம் மேற்குக் கரையில் பதற்றம் நீடித்து வருகிறது. அது தொடக்கம் இஸ்ரேல் இராணுவம் இங்கு சுற்றிவளைப்புகளைத் தீவிரப்படுத்தியது நிலையில் 700க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது