மகளிர் டி20 உலகக் கிண்ணம் : பாகிஸ்தானிடம் தோற்ற இலங்கை இன்று அவுஸ்திரேலியாவுடன் மோதல் !
மகளிர் டி20 உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான தனது முதல் போட்டியில் 31
ஓட்டங்களால் தோல்வியை சந்தித்த இலங்கை அணி இன்று (05) முக்கியமான போட்டியில் நடப்புச் சம்பியன் அவுஸ்திரேலியாவை எதிர்கொள்ளவுள்ளது.
மகளிர் டி20 உலகக் கிண்ணப் போட்டி ஐக்கிய அரபு இராச்சியத்தில் நேற்று முன்தினம் ஆரம்பமானது.
இதில் ஏ குழுவில் இடம்பெற்றிருக்கும் இலங்கை மகளிர் அணி பாகிஸ்தான் அணி
நிர்ணயித்த 117 ஓட்ட வெற்றி இலக்கை எட்ட முடியாமல் தோல்வியை சந்தித்தது.
ஷார்ஜாவில் நடந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களுக்கும் சகல விக்கெட்டுகளையும் இழந்து 116 ஓட்டங்களையே பெற்றது. அணித்தலைவி சமரி அத்தபத்துவுடன்
உதேசிகா பிரபோதனி மற்றும் சுகந்திகா குமாரி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்நிலையில் பதிலெடுத்தாட வந்த இலங்கை மகளிர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க 20 ஓவர்களுக்கும் 9 விக்கெட்டுகளை இழந்து 85
ஓட்டங்களையே பெற்றனர்.
ஆரம்ப வீராங்கனை விஷ்மிகுணரத்ன (20) மற்றும் நிலக்ஷிகா சில்வா (22) ஆகியோர்
மத்திரமே இரட்டை இலக்க ஓட்டங்களைப் பெற்றனர்.
இந்தத் தோல்வியுடன் ஏ குழுவில் பின்தங்கி இருக்கும் இலங்கை அணி இன்று ஷார்
ஜாவில் பி.ப. 3.30 மணிக்கு ஆரம்பமாகும் போட்டியில் அவுஸ்திரேலிய அணியை
எதிர்கொள்ளவுள்ளது.
பத்து அணிகள் பங்கேற்றிருக்கும் டி20 உலகக் கிண்ணத்தில் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு நடைபெற்று வரும் ஆரம்பச்சுற்றுப் போட்டியில் ஒவ்வொரு
குழுவிலும் முதல் இரு இடங்களைப் பெறும் அணிகளே அரையிறுதிக்குத் தகுதி பெறும்.
இந்நிலையில் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்திருக்கும் இலங்கை மகளிர்
அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால் இன்றைய போட்டி யில் வெல்வது கட்டாயமாக அமையும்.