இந்திய அணிக்கு எதிராக சரித் அசலங்க தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு!

இந்திய அணிக்கு எதிராக சரித் அசலங்க தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு!

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியுடனான ஒருநாள் மற்றும் டீ 20 தொடருக்கான 16 வீரர்கள் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சரித் அசலங்க தலைமையிலான இலங்கை அணியில் பெத்தும் நிஸ்ஸங்க ,குசல் மெந்திஸ் ,குசல் ஜனித் பெரேரா ,கமிந்து மெண்டிஸ், தசுன் சானக்க
வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன ,மதீஷ பத்திரன
நுவன் துஷார, துனித் வெல்லாலகே, துஷ்மந்த சமீர
பினுர பெர்னாண்டோ , தினேஷ் சந்திமால் ,அவிஷ்க பெர்னாண்டோ,சமிந்து விக்கிரமசிங்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தலா மூன்று போட்டிகள் கொண்ட இரண்டு ஒருநாள் மற்றும் டீ 20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்திய தேசிய கிரிக்கெட் அணி நேற்றைய தினம் (22) இலங்கை வந்தடைந்தது.

முதலாவதாக, 03 இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 27, 28 மற்றும் 30 ஆம் திகதிகளில் இரவு 07.00 மணிக்கு கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

அதனையடுத்து, ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 2, 4, 7 ஆகிய மூன்று தினங்களில் மதியம் 02.30 மணிக்கு கொழும்பு கேட்டராம சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

எதிர்வரும் 2, 4 மற்றும் 7 ஆம் திகதிகளில் கொழும்பு ஆர் பிரேமதாச சர்வதேச மைதானத்தில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் பகல் இரவு போட்டியாக இடம்பெறவுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )