பெண்கள் பொதுவெளியில் பேச தடை !

பெண்கள் பொதுவெளியில் பேச தடை !

ஆப்கானிஸ்தானில்பெண்கள் பொது இடங்களில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என தாலிபான் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

பெண்களின் குரல்களால் ஆண்களின் மனம் திசைதிருப்பப்படலாம் என்பதால் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக தாலிபான் அமைப்பு கூறியுள்ளது.

அத்துடன், பொது இடங்களில் எப்போதும் தடிமனான துணியால் தங்கள் உடல் மற்றும் முகத்தை மறைக்கவும் ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, பெண்கள் வீட்டில் சத்தமாக பாடவும், படிக்கவும் தாலிபான்கள் தடை விதித்திருந்தனர். இவ்வாறான சட்டங்களை மீறும் பெண்கள் அல்லது சிறுமிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.

இந்நிலையில், இது குறித்து, ஐ.நா. சபை தனது கடும் அதிப்தியை வெளிப்படுத்தியுள்ளது. “இந்த கட்டுப்பாடுகள் ஆப்கானிஸ்தானில் உள்ள மக்களின், குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகளின் வாழ்க்கையை இன்னும் கடினமாக்கக்கூடும்” என்று கவலை தெரிவித்துள்ளது.

மேலும், “அதிகரித்துவரும் அதிகார வரம்பு மீறல், சமுதாயத்திற்கு மிக கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்” என்றும் ஐ.நா.சபை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )