சளி – காய்ச்சலை ஓட ஓட விரட்டும் தூதுவளை மிளகு ரசம்
சளி, காய்ச்சல், இருமல் போன்றவற்றுக்கு தூதுவளை மிளகு ரசம் மிகவும் சிறந்தது.
அந்த வகையில் தூதுவளை மிளகு ரசம் எவ்வாறு செய்வதெனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- தூதுவளை – ஒரு கப்
- மிளகு – ஒரு தேக்கரண்டி
- தக்காளி – 4
- கறிவேப்பிலை – தேவையான அளவு
- சீரகம் – ஒரு தேக்கரண்டி
- கடுகு – அரை தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
- கடலை எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
- பெருங்காயத் தூள் – சிறிதளவு
- புளி – நெல்லிக்காய் அளவு
- சின்ன வெங்காயம் – 10
- வெள்ளைப்பூண்டு – 8 பல்
- வரமிளகாய் – 3
- கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் கடலை எண்ணெய் ஊற்றி, சுத்தம் செய்து வைத்துள்ள தூதுவளையை சேர்த்து நன்றாக வதக்கவும்.
அடுப்பில் பாத்திரமொன்றை வைத்து அதில் இரண்டு க்ளாஸ் தண்ணீர் ஊற்றி, கொதித்து வரும்போது புளி கரைசலையும் அரைத்த தக்காளியையும் சேர்த்து கலக்கவும்.
அத்துடன் மஞ்சள் தூள், இடித்த வெள்ளைப்பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சேர்க்கவும்.
பின்னர் தூதுவளையை அரைத்து சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு எடுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, சீரகம், கடுகு,காய்ந்த மிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து பின் அதனை அக் கலவையில் சேர்க்கவும்.
கடைசியாக கொத்தமல்லி, மிளகுத் தூள் சேர்த்து இறக்கினால் சுவையான தூதுவளை மிளகு ரசம் தயார்.