குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு

குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந் நிலையில், கனமழையைத் தொடர்ந்து பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓடினர்.

இந் நிலையில் பழைய குற்றால அருவியில் குடும்பத்தினருடன் குளித்துக் கொண்டிருந்த 17 வயது சிறுவன், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். வெள்ளத்தில் சிக்கி, மாயமான சிறுவனை தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர். திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 5 பேர் சிக்கிய நிலையில், 4 பேரை அங்கிருந்தோர் நல்வாய்ப்பாக மீட்டனர்.

மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர், எஸ்.பி. சுரேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளிலும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மெயின் அருவி, ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம் ஆகிய அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )