ஜனாதிபதி – எலான் மஸ்க் சந்திப்பு
இந்தோனேசியாவில் நடைபெற்றுவரும் 10ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்ட அமர்வுடன் இணைந்து இலங்கையில் Starlink சேவை வசதியை அமுல்ப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் உலகப் புகழ்பெற்ற வர்த்தகரான எலான் மஸ்க் (Elon Musk) ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு இன்றையதினம் (19) இடம்பெற்றுள்ளது. இதன்போது Starlink செயன்முறையில் இணைவதற்கான விண்ணப்ப செயன்முறையை விரைவுபடுத்துவது குறித்து ஆராயப்பட்டுள்ளது.
CATEGORIES Sri Lanka