வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு
கிழக்கு-மத்திய வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை (21) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து ஒக்டோபர் 23-ஆம் திகதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
70-80 கிலோமீற்றர் வேகத்தில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் பலத்த மழைவீழ்ச்சியுடன் கடற்பரப்புகளுக்கு மேல் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் எனவும் மேலும் தெரிவித்துள்ளது.
எனவே, கடற்தொழில் மற்றும் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் போது கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் அவதானமாக இருக்குமாறும் கடலுக்கு அப்பாற்பட்ட பகுதிகளில் கோரப்பட்டுள்ளது.