வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
வங்காள விரிகுடாவின் மத்திய கிழக்கு ஆழ் கடற்பகுதியில் நெடுநாள் மீன்பிடி படகுகளில் கடற்றொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் எச்சரிக்கையாகச் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
வங்காள விரிகுடாவின் மத்திய கிழக்குப் பகுதியிலும் வடக்கு அந்தமான் பகுதியிலும் குறைந்த காற்றழுத்த வலயம் உருவாகியுள்ளதன் காரணமாக இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த குறைந்த காற்றழுத்த நிலைமை நாளைய தினம் தாழமுக்கமாக மாறக்கூடும் எனவும் அது நாளை மறுதினம் சூறாவளியாக மாறக்கூடிய வாய்ப்புள்ளதாக எனவும் அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தென் மாகாணத்தில் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் இடைக்கிடையே இடியுடன் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.