தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுகாதார உத்தியோகஸ்தர்கள் திடீர் சோதனை !
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயமும் தலவாக்கலை நகரசபையும், கொட்டகலை பிரதேச சபையும் இணைந்து தலவாக்கலை, கொட்டகலை, வட்டகொட,கொமர்ஷல்,போகாவத்த போன்ற பகுதிகளில் உணவை கையாளும் நிறுவனங்கள் தொடர்ந்தும் சுகாதார அதிகாரிகளால் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது உணவு சட்டத்தை மீறுவோருக்கு எதிராக நுவரெலியா,ஹட்டன் நீதிமன்றங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பழுதடைந்த வெங்காயம்,முட்டை, மரக்கறி வகைகள்,உழுந்து, கடலை,பருப்பு, அரிசி,பயறு போன்ற பல உணவுகள் கைப்பற்றப்பட்டன.