‘அமரன்’ ரிலீஸ் திகதி அறிவிப்பு !

‘அமரன்’ ரிலீஸ் திகதி அறிவிப்பு !

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன்
நடிப்பில் உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் அமரன் திரைப்படம் எதிர்வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வெளியாகவுள்ளது.

இதனை ராஜ்கமல் நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

அமரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தில்”முகுந்தன்” என்கின்ற கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், ஒரு ராணுவ வீரராக நடித்திருக்கிறார்.

மறைந்த இந்திய ராணுவ வீரரான முகுந்தன் வரதராஜன் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )