சிங்கிள்ஸ் டே தெரியுமா ? 

சிங்கிள்ஸ் டே தெரியுமா ? 

ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 14 ஆம் திகதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. பிப்ரவரி 7 ஆம் திகதி ரோஸ் டேயுடன் தொடங்கி, அதைத் தொடர்ந்து ப்ரோபோஸ் டே, சாக்லேட் டே, டெடி டே, ப்ராமிஸ் டே, ஹக் டே, கிஸ் டே மற்றும் இறுதியாக பிப்ரவரி 14 ஆம் திகதி காதலர் தினம் என நீண்ட லிஸ்டே உள்ளது.

ஆனால் எல்லோருக்கும் காதல் உடனே அமைவதில்லை. அதிலும் உண்மையான காதல் என்பது மிக மிக அரிதானதாகவே அமையும். எனவே சிறுபான்மையினர்காளான காதலர்களை தவிர்த்து தனித்திருக்கும் பெரும்பான்மையினர் சிங்கில்ஸ் என இணைய தலைமுறையால் அழைக்கப்படுகின்றனர்.

வருடத்தின் தொடக்கத்தில் காதலர் தினம் 7 நாட்களுடன் கூட்டமாக வந்தாலும் வருட இறுதியில் சரியாக சொன்னால் நவம்பர் 11 ஆம் திகதி சிங்கிள்ஸ் டே சிங்கிளாக கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் சிங்கிளாக இருப்பவர்கள் தங்களை தாங்களே நேசிக்கவும், காதல் தோல்வியில் சிங்கிள் ஆனவர்கள் அதில் இருந்து விடுபட்டு புதிய பாதையை தேர்வு செய்யவும் இந்த சிங்கிள்ஸ் டே ஒரு பாலமாக இருக்கும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )