கமலா ஹாரிஸ் ஜனாதிபதியானால்  3-ம் உலகப்போர் வந்துவிடும்

கமலா ஹாரிஸ் ஜனாதிபதியானால் 3-ம் உலகப்போர் வந்துவிடும்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 5-ந்திகதி நடைபெறவுள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். அதே சமயம், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதியும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் களமிறங்கியுள்ளார்.

தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இருவரும் தற்போது தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந் நிலையில், பென்சில்வேனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் டொனால்டு டிரம்ப் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“சீன ஜனாதிபதி ஜின்பிங், ரஷ்ய ஜனாதிபதி புதின் போன்ற தலைவர்களை சமாளிக்கும் அளவிற்கு கமலாவுக்கு திறமை கிடையாது. அவர் அமெரிக்காவின் ஜனாதிபதியானால் நிச்சயம் 3-ம் உலகப்போர் வந்துவிடும்.

பல லட்சம் பேரின் வாழ்க்கை ஆபத்திற்குள்ளாகிவிடும். அமெரிக்காவின் மகன்களும், மகள்களும் ஏதோ ஒரு நாட்டில் நடக்கும் போரில் சண்டையிடுவதற்காக அனுப்பி வைக்கப்படுவார்கள். நான் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் 3-ம் உலகப்போர் நிகழாமல் நிச்சயம் தடுப்பேன்.” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )