வீட்டிலேயே சாம்பிராணி தயாரிக்கலாம்
பூஜையின்போது அல்லது தினசரி வீடுகளில் சாம்பிராணி போடுவது வழக்கம். இது வீட்டில் ஒருவித நேர்மறை ஆற்றலை ஏற்படுத்துகிறது.அந்த வகையில் வீட்டிலேயே கோன் சம்பிராணி எப்படி செய்வதெனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- உலர்ந்த பூக்கள் (ரோஜா, சாமந்தி, மல்லிகை)
- கிராம்பு – 10
- ஏலக்காய் – 10
- மஞ்சள் தூள் – ஒரு மேசைக்கரண்டி
- பச்சைக் கற்பூரம் – 5
- வெட்டி வேர் – ஒரு கைப்பிடி
- ரோஜா – ஒரு கப்
- சந்தனத் தூள் – இரண்டு மேசைக்கரண்டி
- ரோஸ் எசன்ஸ் – மூன்று தேக்கரண்டி
- பன்னீர் – சிறிய கப்
- சாமகிரி (வாசனை மூலிகைகளின் கலவை) – ஒரு கப்
- நெய்
செய்முறை
முதலில் உலர்ந்த பூக்களை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். அரைத்தவற்றை சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின் ஏலக்காய், கிராம்பு, பச்சைக் கற்பூரம், மஞ்சள் தூள், சந்தனத் தூள், வெட்டி வேர் போன்றவற்றையும் அரைத்துக்கொள்ள வேண்டும்.
அகலமான பாத்திரத்தில் இரண்டு பொடிகளையும் சேர்த்து கலந்து பின்பு நெய் ஊற்றி நன்றாகக் கலக்க வேண்டும். அக் கலவையில் சிறிது சிறிதாக பன்னீர் சேர்த்து கிளறிக்கொள்ளவும்.
புட்டு மா பதத்துக்கு கரைத்துக்கொள்ள வேண்டும். பின் கோன் மோல்டில் வைத்து இறுக்கமாக சுருட்டி ஒட்டவும்.
அதன் உள்ளே இக் கலவையை வைத்து அழுத்தி வெளியில் எடுத்தால் சாம்பிராணி ரெடி. இதனை இரண்டு நாட்கள் வெயிலில் காயவிட வேண்டும். அவ்வளவு தான்…இனி வீட்டிலேயே சாம்பிராணி தயாரிக்கலாம்.