இந்த தவறுகளை ஒருபோதும் செய்துவிடாதீர்கள்
ஆச்சார்யா சாணக்கியர் அவரது சாணக்கிய நீதியில் சில விடயங்களை அறிவுறுத்துகிறார்.
அதன்படி உயிருடன் இருக்கும்பொழுது ஒருவர் செய்யும் செயல்கள்தான் அவர் இறந்த பின்னர் சொர்க்கத்துக்கு செல்கிறாரா? இல்லை நரகத்துக்கு செல்கிறாரா? என்பதை தீர்மானிக்கும்.
அதன்படி சில விடயங்களை செய்பவர்களுக்கு இறந்த பின்னர் நரகம் தான் என்று கூறப்படுகிறது.
பெண்களை அவமதிப்பவர்கள்
பெண்களை அவமதிப்பவர்கள், குழந்தைகளிடம் தவறான முறையில் நடந்து கொள்பவர்கள், ஏழைகளிடம் இருப்பவற்றை பறிப்பவர்கள், இறந்ததன் பின்னர் நரகத்தை அனுபவிப்பார்கள். பெண்கள், முதியவர்கள், குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்பவர்கள் மன்னிக்கமுடியாத குற்றவாளிகள் என கூறப்பட்டுள்ளது.
பேராசை நிறைந்தவர்கள்
பேராசை கொண்டவர்கள் தங்கள் சுயநலத்துக்காக யாரை வேண்டுமானாலும் காயப்படுத்துவார்கள். அனைத்தையும்விட பணம், சொத்தின் மீது அதிக ஆசை கொண்டவர்ளுக்கு இறந்த பின்னர் நிச்சயம் மரணம்தான்.
பாவிகள்
உறவினர்களை வெறுத்து அவமதிப்பவர்கள், கர்மவினையால் பெற்றோரை துன்புறுத்துபவர்கள் நரகம் செல்வார்கள்.
அன்பானவர்களை காயப்படுத்துதல்
தனக்கு மிகவும் பிரியமானவர்களை துன்புறுத்துபவர்களுக்கு நிச்சயம் நரகத்தில் இடம் உண்டு. அவர்களது குணம் அவர்கள் உயிரோடிக்கும்போதும் கொஞ்சம் கொஞ்சமாக கொல்லத் தொடங்கும்.