நவம்பர் 14 ஆம் திகதிக்கு பின்னர் எமது போராட்டம் ஆரம்பமாகும்

நவம்பர் 14 ஆம் திகதிக்கு பின்னர் எமது போராட்டம் ஆரம்பமாகும்

டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக அனைத்து தொகுதிகளிலும் ஒரே நேரத்தில் சனிக்கிழமை (09) உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்க,   நவம்பர் 14 ஆம் திகதிக்கு பின்னர் தமது போராட்டம் ஆரம்பமாகும் என தெரிவித்துள்ளார்.
 
தாம் எழுப்பும் உண்மையான பொருளாதார பிரச்சனைகளை அரசியல் சேறு பூசி மறைக்க முயல வேண்டாம் என தெரிவித்த  ரணில் விக்ரமசிங்க, நாட்டுக்கு எதிர்காலம் வேண்டுமெனில் பாராளுமன்றத்திற்கு  அனுபவம் வாய்ந்த அணியை நியமிக்குமாறு கோருவதாக தெரிவித்துள்ளார்.
 
இன்னும் சில நாட்களில் புதிய ஜனாதிபதியை நியமித்து பாராளுமன்றம் கலைக்கப்படும் போது  ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ஐஎம்எப் உடன்படிக்கையை நிராகரித்த திசைக்காட்டியே  நாட்டுக்கு பொறுப்பு கூறவேண்டும்.  எனினும், பொருளாதாரம் தொடர்பாக  ஆலோசிக்க இப்போது சர்வதேச நாணய நிதியத்தை திசைகாட்டி  சந்தித்து வருகிறது.
 
மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை, அரசாங்கத்தின் கொள்கை, அரசாங்கத்தின் பார்வை மற்றும் வேலை திட்டம் குறித்து ஜனாதிபதி  நாட்டிற்கு விளக்கமளிக்க வேண்டும்.
 
இதைப் பற்றி அறிக்கை விடுவதற்கு பதிலாக, பிறரைக் குற்றம் சாட்டுவது, அவதூறாக பேசுவதும்தான் ஜனாதிபதியின் கடமையாக உள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.  

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )