போதை உருண்டைகளை உட்கொண்டு இலங்கை வந்த வெளிநாட்டவர் கைது

போதை உருண்டைகளை உட்கொண்டு இலங்கை வந்த வெளிநாட்டவர் கைது

சியரா லியோனில் இருந்து போதைப்பொருள் கடத்தி வந்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் நேற்று (12) கிரீன் சேனலின் ஊடாக வெளியேற முற்பட்ட குறித்த பயணியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, சுங்கத் திணைக்கள மேலதிக பணிப்பாளரும், சுங்கப் பேச்சாளருமான சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார் .

சந்தேக நபரை சுங்கப் பகுதியில் ஸ்கேனர் மூலம் சோதனை செய்த அதிகாரிகள், பயணி போதைப் பொருளை உட்கொண்டு வந்திருந்ததை அடையாளம் கண்டுள்ளனர்.

32 வயதான சந்தேகநபர் சியரா லியோன் நாட்டவர் என்பதுடன், துருக்கி விமான சேவைக்கு சொந்தமான TK 730 என்ற விமானத்தில் நேற்று காலை இஸ்தான்புல் வழியாக இலங்கை வந்தடைந்துள்ளார்.

சந்தேகநபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், போதைப்பொருள் அடங்கியதாக சந்தேகிக்கப்படும் 17 சீலிடப்பட்ட பொதிகள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.

இது போன்ற மேலும் உருண்டைகள் தனது வயிற்றில் இருப்பதாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மீட்கப்பட்ட உருண்டைகளுடன் சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட கொக்கைன் போதைப்பொருளின் பெறுமதி தெரு மதிப்பு ரூ. 13 மில்லியன் என அறியப்பட்டுள்ள.

இலங்கை சுங்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் உதவியுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்துள்ளதாக, சீவலி அருக்கொட தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )