வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஜோ பைடனுடன் டிரம்ப் சந்திப்பு

வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஜோ பைடனுடன் டிரம்ப் சந்திப்பு

அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக, குடியரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு உலகத் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் ஆகியோர் டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்தனர். டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் திகதி வாஷிங்டனில் பதவியேற்க இருக்கிறார்.

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, வெள்ளை மாளிகையில் வந்து சந்திக்குமாறு ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பும் நேற்று (13) சந்தித்தனர்.

இந்தச் சந்திப்பு வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் நடந்தது. ஜனாதிபதிஜோ பைடன், டிரம்புக்கு விருந்து அளித்து கௌரவித்தார்.

அப்போது அதிகார மாற்றம் சுமூகமாகவும் அமைதியான முறையிலும் நடப்பது உறுதி செய்யப்படும். அது குறித்து அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என உறுதி அளித்தார்.

அதற்கு பதிலளித்த டிரம்ப் அது எவ்வளவு சீராக முடியுமோ அவ்வளவு சீராக இருக்கும் என்றார். 4 ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக வெள்ளை மாளிகைக்கு டிரம்ப் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )