மீண்டும் கூடுகிறது தேர்தல் ஆணைக்குழு ?
பொதுத் தேர்தல் முடிவடைந்ததை நிலையில் இம்மாதம் 27ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு மீண்டும் கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பில் உள்ளூராட்சி தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளது.
தற்போது, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக நீதிமன்ற உத்தரவும் வழங்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் கலந்துரையாடுவதே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமாகும்.
இதேவேளை, எதிர்வரும் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களுக்கான நிதித்தேவையை பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ள இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில்
உள்ளடக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, இந்த ஆணைக்குழு கூட்டத்தில் தேர்தல் திகதி குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.