அம்பாறை மாவட்டத்தில் பலத்த மழை

அம்பாறை மாவட்டத்தில் பலத்த மழை

வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் தாழமுக்கம்  தீவிரமடைந்து தாழ் அமுக்கமாக வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில்  தாழ் அமுக்கமாகி  தீவிரமடைவதுடன் இலங்கையின் கிழக்குக் கரையை அண்மித்ததாக அடைமழை ஏற்பட்டு வெள்ள நிலைமை காணப்படுகின்றது.

அம்பாறை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பெய்த மழையினால்  தாழ் நிலங்களில் வெள்ள நிலை ஏற்பட்டுள்ளது. வெள்ள நீர் வடிந்தோட வசதியாக சாய்ந்தமருது முகத்துவாரம்  வெட்டப்பட்டுள்ளது.
தற்போது அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களான கல்முனை , நிந்தவூர் , காரைதீவு, சாய்ந்தமருது, நற்பிட்டிமுனை, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, பாண்டிருப்பு, மருதமுனை, பெரியநீலாவணை, துறைவந்தியமேடு போன்ற தாழ்நில பகுதிகளில் வெள்ள நீர் பெருக ஆரம்பித்துள்ளன. பலத்த மழை காரணமாக சாய்ந்தமருதில் வீட்டைச் சுற்றிக் கட்டப்பட்டுள்ள கல் மதிலில் மரம் ஒன்று சாய்ந்து மதில் உடைந்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )