கேக் பெட்டிகளில் கடத்தி வரப்பட்ட 6 அரிய வகை பல்லிகள்
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் சுங்கத்துறை மற்றும் DRI அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 2 கேக் பெட்டிகளில் 6 அரிய வகை பல்லிகளை இரு பயணிகள் கொண்டு வந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த கேக் பெட்டிகளை கொண்டு வந்திருந்த இரு பயணிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தாய்லாந்து நாட்டிலிருந்து நீல நாக்குக் கொண்ட பல்லிகளை கடத்தி வந்தமை தெரிய வந்துள்ளது.
இதையடுத்து வனத்துறை மற்றும் DRI அதிகாரிகள் பல்லிகளை விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இரு பயணிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
CATEGORIES India