அம்பாறை மாவட்டத்தில் வெள்ளைக் கொடிகள் கட்டி துக்க தினம் அனுஷ்டிப்பு

அம்பாறை மாவட்டத்தில் வெள்ளைக் கொடிகள் கட்டி துக்க தினம் அனுஷ்டிப்பு

வெள்ள நீரில் அகப்பட்டு  மரணமடைந்த  மாணவர்கள் உட்பட ஏனையோரது மறுவாழ்விற்காக  வெள்ளைக் கொடிகள் கட்டப்பட்டு  துக்க தினம் அனுஷ்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் மாவடிப்பள்ளி சம்மாந்துறை பகுதிகளில் இவ்வாறு வெள்ளைக்கொடிகள் கட்டப்பட்டு துக்கதினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றன.

மேலும்  நிந்தவூர் காஷிபுல் உலூம் அறபுக் கல்லூரி  மத்ரசாவில் கல்வி கற்று மரணமடைந்த  மாணவர்களின் மறுவாழ்விற்காக  துக்கம் அனுஸ்டிக்கப்பட்டு   வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டது.

நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியில் ஷரீஆ மற்றும் ஹிப்ழ் பிரிவில் முழு நேரமாக கல்வி கற்று வந்த அனைத்து மத்ரசா மாணவர்களுக்கும் கால நிலை சீற்றத்தின் காரணமாக மத்ரசாவினால் கடந்த  26-11-2024 செவ்வாய்க்கிழமை  மாலை விடுமுறை வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தில் சம்மாந்துறை பகுதியை  சேர்ந்த மாணவர்கள் தமது பிரதேசத்திற்கு செல்லும் வழியில் காரைதீவுஇமாவடிப்பள்ளி பாலத்தடியில் வெள்ள அனர்த்தத்தின் அகப்பட்டு மரணமடைந்த  சம்பவமானது  முழு நாட்டையும்  பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் இம்மாணவர்களின் தவிர்க்க முடியாத பிரிவின் காரணமாக  துக்கத்தினை வெளிப்படுத்தும் நோக்குடன் சமூக நலன் விரும்பிகளால்   வெள்ளைக் கொடி கட்டி பறக்கவிடப்பட்டுள்ளது.

அதே போன்று இன்றைய தினம்(29)  வெள்ளிக் கிழமை நிந்தவூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் கீழ் இயங்கக் கூடிய அனைத்து ஜும்ஆ பள்ளிவாசல்களிலும் இடம் பெறக் கூடிய குத்பாக்களிலும் ஷஹீதுகளுடைய அந்தஸ்து தொடர்பாக குத்பா உரை நிகழ்த்தப்பட இருப்பதுடன்இ ஜும்ஆ தொழுகையினைத் தொடர்ந்து  மரணமடைந்த   மாணவர்களுக்காக   ஜனாஸா தொழுகை நடாத்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதோடு  அதனைத் தொடர்ந்து விஷேட துஆ பிரார்த்தனையும் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )