மக்கள் ஆணைக்கு துரோகமிழைக்காதீர்கள்
தற்போதைய அரசாங்கம் நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியுள்ளதாக அரசாங்கத்துடன் தொடர்புடைய அமைச்சர்கள் பாராளுமன்றத்தில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டாலும், நாட்டில் மனிதாபிமான ரீதியாக ஸ்திரத்தன்மை ஏற்படவில்லை என்பதை புது வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வில் கலந்து இன்று (07) கொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டினார்.
ஸ்திரமான நாடு உருவாகி வருகின்றது என்ற பாராளுமன்றத்தில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வரும் வேளையில், மக்கள் பெரும் ஆணையை பெற்றுத் தந்தது ஏலவே காணப்பட்ட சர்வதேச நாணய நிதிய இணக்கப்பாட்டை அவ்வாறே நடைமுறைப்படுத்துவதற்காகவா என கேள்வி எழுப்புகிறேன்.
புதிய கடன் மறுசீரமைப்பு பகுப்பாய்வொன்றை மேற்கொண்டு புதிய IMF இணக்கப்பாட்டை எட்டுவோம் என்ற அறிவிப்பை கிடப்பில் போட்டு, மக்கள் வழங்கிய ஆணையை காலில் போட்டு மிதித்து தூள் தூளாக்கி விட்டாத எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.