2019 சர்ச்சைக்குரிய அறிக்கை தொடர்பில் விவாதத்துக்கு வருமாறு அனுரவுக்கு ஹக்கீம் சவால் !

2019 சர்ச்சைக்குரிய அறிக்கை தொடர்பில் விவாதத்துக்கு வருமாறு அனுரவுக்கு ஹக்கீம் சவால் !

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்கவை, எந்தவொரு தொலைக்காட்சி அலைவரிசையிலும் நேரடி விவாதத்திற்கு வருமாறு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங் கிரஸின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் சவால் விடுத்துள்ளார்.

பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஹக்கீம்,

நீதிமன்றத்திற்கு செல்வதற்கு முன்னர், பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்கவுடன்
விவாதத்தில் ஈடுபட விரும்புவதாகவும், ஜனாதிபதி தேர்தலில் அவர் தோல்வியடைந்த பின்னர் விவாத்தில் ஈடுபடவிரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

2019, மே மாதம் வெளியிடப்பட்ட தனது சர்ச்சைக்குரிய அறிக்கையில் அவர் கூறியதன் அர்த்தம் என்ன என்பதை அனுரகுமார திஸாநாயக்க விளக்கமளிக்க வேண்டும் என்றும் ரவூப்ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில், எந்தவொரு சட்ட நடவடிக்கைகளுக்கும் முகம் கொடுக்க தயாராக இருப்பதாகவும் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

தனது நற்பெயருக்கு ஏட்படுத்தியுள்ள களங்கத்திற்காக பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமிடம் 200 கோடி ரூபா வழங்கக் கோரி, ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இது தொடர்பிலேயே பாராளுமன்ற உறுப்பினர் ஹக்கீம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

காத்தான்குடியில் கடந்த ஆகஸ்ட் மாதம் பாராளுமன்ற உறுப்பினர் ஹக்கீம் தமிழில் உரையாற்றிய போது, பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக குறித்தே இந்த கோரிக்கை கடிதத்தை அவர் அனுப்பிவைத்துள்ளார்.

2019, மே மாதம் பாராளுமன்றத்தில் அனுரதிஸாநாயக்க தெரிவித்த கருத்தை வேண்டுமென்றே பாராளுமன்ற உறுப்பினர் ஹக்கீம் திரிபுபடுத்தி இவ்வாறு தெரிவித்துள்ளதாகவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

மனக்காழ்ப்புடனும் துவேஷத்துடனும் மேற்கொள்ளப்பட்ட இந்த உரையின் மூலம் மக்கள் மனதில் தனக்குள்ளமதிப்பை குறைப்பதற்கும், அரசியல் தலைவர் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் என்ற தனது நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்க
மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )