சீனாவுக்கு கோழி இறைச்சி ஏற்றுமதி செய்ய அமைச்சரவை அனுமதி
சீன சந்தைக்கு கோழி இறைச்சியை ஏற்றுமதி செய்வது தொடர்பான நடைமுறைக்கு (நெறிமுறை) பொருந்தக்கூடிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுள்ளது.
சீன சுங்க அதிகாரசபையின் தலையீட்டுடன், இலங்கையில் இருந்து சீனாவிற்கு கோழி இறைச்சி ஏற்றுமதியை குறிப்பிட்ட நடைமுறைக்கு ஏற்ப ஆய்வு, தனிமைப்படுத்தல் மற்றும் சுகாதாரத் தேவைகளை உள்ளடக்கிய உடன்படிக்கையில் இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திட முன்மொழியப்பட்டுள்ளது. .
இதன்படி, சீன சுங்க நிர்வாகத்திற்கும் அவரது அமைச்சுக்கும் இடையில் மேற்படி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட விவசாய, கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
CATEGORIES Sri Lanka