சவுதி அரேபியாவில் கனமழை ; வெள்ளக்காடாக மாறிய மெக்கா

சவுதி அரேபியாவில் கனமழை ; வெள்ளக்காடாக மாறிய மெக்கா

பாலைவன நாடான சவுதி அரேபியாவில் பெய்த மிக கனமழையால் பல இடங்களில் வெள்ளம் தேங்கியுள்ளது.

புனித நகரங்களான  மெக்கா, மதீனா மற்றும் ஜெட்டாவில் பெய்த அதி கனமழையால் சாலைகளில் வெள்ளம் தேங்கி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அல்-ஷாஃபியா எனும் பகுதியில் 49.2 மிமீ மழையும் ஜெட்டாவின் அல்-பசதீன் பகுதியில் 38 மிமீ மழையும் மதீனாவின் நபிகள் நாயகம் பள்ளிவாசல் பகுதியில் 36.1 மிமீ மழையும் அதன் அருகிலுள்ள குபா மசூதியில் 28.4 மிமீ மழையும் பெய்துள்ளது.

மேலும் மெக்கா, மதீனா மற்றும் ஜெட்டா ஆகிய நகரங்களில் மிக கனமளிக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )