குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டோரை அரச உயர் பதவிகளிலிருந்து நீக்குக !
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் என நம்பகத்தன்மை மிக்கவிதத்தில் குற்றஞ்சாட்டப்படுபவர்களை உயர் பதவிகளில் அமர்த்தக்கூடாதுவும் அவர்களை நீக்குவ தற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘அரசாங்கத்தின் உயர் பதவிகள், பாதுகாப்பு துறை, இராஜதந்திரப் பதவிகள் வகிக்கும் நபர்கள் மீது மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகத்தன்மை மிக்க குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டால், அவர்களை அதிகாரத்திலிருந்து நீக்கு தலை முன்னெடுக்கவேண்டும்.
மேலும் அத்தகையவர்களை நியமனம் செய்தலை தவிர்க்கவேண்டும், நிலைமாறுகால நீதியை ஏற்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் அமைப்பில் அவ்வாறான நபர்கள் இடம்பெற்றிருந்தால் அவர்களை நீக்கவேண்டும் ‘ என்று கூறப்பட்டுள்ளது.