ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக 54000 பொலிஸார்

ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக 54000 பொலிஸார்

ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக 54,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக சமூக பொலிஸ், சுற்றுலா, முதலீடுகள் மற்றும் தேர்தல்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சங்க கரவிட்ட தெரிவித்துள்ளார்.

பொது பாதுகாப்பு அமைச்சில் நேற்று (29) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

13,000 க்கும் அதிகமான வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் 45 க்கும் அதிகமான வாக்கு எண்ணும் நிலையங்கள் மற்றும் 3200 நடமாடும் வாகனங்கள் தேர்தல் காலத்தில் செயற்படுத்தப்படுவதற்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கரவிட்ட தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், சட்டவிரோத சுவரொட்டிகள், கட்அவுட்கள் மற்றும் பதாகைகளை அகற்றுவதற்காக 1500 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும், சட்டவிரோத கட்அவுட்கள் அகற்றப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )