ஓடிடி ரிலீஸுக்கு தயாராகும் ஆவேசம்

ஓடிடி ரிலீஸுக்கு தயாராகும் ஆவேசம்

ரோமஞ்சம் படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் பகத் பாசில் நடித்த படம் ஆவேசம் கடந்த மாதம் 11 ஆம் திகதி வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

உலகளவில் இதுவரை ஆவேசம் திரைப்படம் 130 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதில் ஃபஹத் ஃபாசிலுடன் சஜின் கோபு, சிஜு சன்னி, ஆஷிஷ் வித்யார்த்தி, மன்சூர் அலிக்கான் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு இசையமைத்த சுஷின் ஷ்யாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

படத்தின் பாடல்கள் அனைத்தும் மிக ஹிட்டாகியது குறிப்பாக டேப்சி குரலில் இலுமினாட்டி என்ற பாடல் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. படத்தில் பகத் பாசில் ரீல் செய்யும் காட்சிகளை மக்கள் இன்ஸ்டாகிராமில் ரீ கிரியேட் செய்து வருகின்றனர். படத்தில் பகத் பாசில் முற்றிலும் மாறுபட்ட கேங்க்ஸ்டர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் அமேசான் பிரைம் ஓ.டி.டி.யில் மே 9-ம் திகதி வெளியானது. இந்நிலையில் அமேசான் பிரைம் ஓ.டி.டி.யில் வரும் 21-ம் திகதி ‘ஆவேசம்’ படத்தை தமிழில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )