முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் ஜெகன் மோகன் ரெட்டி

முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திராவில் உள்ள மொத்த சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கை 175 ஆகும். இதில் 88 இடங்களை வெல்லும் கட்சி ஆட்சியை பிடிக்கும். இந்த தேர்தலில் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிட்டது.

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி 144 இடங்களிலும், ஜனசேனா கட்சி 21 இடங்களிலும், பா.ஜ.க. 10 இடங்களிலும் போட்டியிட்டது. தற்போதைய நிலவரப்படி, தெலுங்குதேசம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சேர்ந்து பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை கடந்தது. இதன் மூலம் தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவில் ஆட்சியை பிடித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்-மந்திரி ஆகிறார்.

இந் நிலையில், ஆந்திரப் பிரதேச சட்டசபை தேர்தலில் தோல்வியை சந்திதத்தை தொடர்ந்து முதல் மந்திரி பதவியில் இருந்து ஜெகன் மோகன் ரெட்டி ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஏற்றுக்கொண்டதாக கவர்னரின் செயலாளர் அறிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )