சீரற்ற காலநிலையால் 475, 000 பேர் பாதிப்பு

சீரற்ற காலநிலையால் 475, 000 பேர் பாதிப்பு

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. 

24 மாவட்டங்களில் 141, 268 குடும்பங்களைச் சேர்ந்த 475, 000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 

அதேநேரம், 101 வீடுகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளதுடன் 2, 591 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

9, 934 குடும்பங்களைச் சேர்ந்த 32, 361 பேர் தங்களது இருப்பிடங்களிலிருந்து இடம்பெயர்ந்துள்ளதுடன் அவர்கள் 366 தற்காலிக முகாம்களில் தொடர்ந்தும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )