மேல் மாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறை

மேல் மாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறை

மேல்மாகாணத்தில் 4000 இற்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாகத் மேல்மாகாண சபை தெரிவித்துள்ளது.

ஆங்கிலம், தமிழ், தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கும், ஆங்கில ஊடகத்தின் மூலம் பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக மேல்மாகாண பிரதம செயலாளர் தம்மிகா விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலைமைக்கு தீர்வாக பேராதனை மற்றும் கொழும்பு பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டதாரிகள் குழுவொன்று கற்பித்தலுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், தற்போது பாடசாலைகளில் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்றையும் அவர்களின் தகைமையின் அடிப்படையில் ஆசிரியர் பணிக்காக இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தம்மிகா விஜேசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )