சிவனொளிபாதமலை யாத்திரைக்கு போதைப்பொருளுடன் வந்த இளைஞன் கைது
ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் சிவனொளிபாத மலை யாத்திரைக்கு வருகை தந்திருந்த இளைஞர் ஒருவர், ஹட்டன் ரயில் நிலையத்தில் வைத்து நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளார்.
கேகாலை பகுதியைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
CATEGORIES Sri Lanka