எவ்வகை திரி எத்தகைய பலன் தரும் ?

எவ்வகை திரி எத்தகைய பலன் தரும் ?

குடும்ப நலனுக்காகவும் உறவினரின் நலனுக்காகவும் விளக்கேற்றி பூஜிக்கும் பொழுது அதற்குரிய எண்ணெயைத் தேர்ந்தெடுப்பதைப்போல விளக்கில் போடப்படும் திரியையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.

எவ்வகையான திரியை பயன்படுத்தினால் எத்தகைய பலன் கிடைக்கும் என்பதை நமக்கு முன்னோர் வழிகாட்டிச் சென்றிருக்கிறார்கள்.

அதைப் பின்பற்றினால் நாம் விரும்பும் பலனை அடைவதும் எளிது.

பொதுவாக பஞ்சுத் திரியே விளக்கேற்றத் தகுந்தது. பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்றினால் நல்லவையெல்லாம் பெறலாம்.

வாழைத்தண்டிலிருந்து நார் எடுத்து திரித்து காயவைத்து விளக்கேற்றலாம். இத்தகைய திரியைப் பயன்படுத்தி தெய்வ குற்றத்திலிருந்து விடுபடலாம்.

இல்லத்தில் செல்வ வளம் பெருக வேண்டும் என்று விரும்பினால், வெள்ளெருக்கின் இலைப் பட்டையினால் திரி செய்து அதனால் விளக்கேற்றலாம். இதுபோல தாமரைத் தண்டிலிருந்து பிரித்தெடுத்த நூலால் திரிசெய்து போட்டு தீபமேற்றினால் செல்வம் நிலைப்பதுடன், செய்த பாவங்களும் அகலும்.

புதிதாக மஞ்சள் வண்ணத் துணி வாங்கி, அதில் திரி செய்து போட்டு தீபம் ஏற்றலாம். இதனால் அம்பாளின் பேரருள் கிடைக்கும்.

மேலும் நோய்களை அகற்ற வல்லது. சிவப்புத் துணியினால் திரி செய்து போட்டால், திருமண யோகம் கிட்டும். புத்திர பாக்கியமும் ஏற்படும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )