குறட்டையை குறைக்க சில டிப்ஸ்
பலருக்கு இன்று குறட்டை பிரச்சினை முக்கியமான பிரச்சனையாகவே உள்ளது. குறட்டைவிட்டுத் தூங்குபவர்கள் நிம்மதியாகத் தூங்குகிறார்கள் என நினைகிறோம்.
கண்டிப்பாக கிடையாது. அது ஒருவிதமான மயக்க நிலை. ஆரோக்கியமான தூக்கம் கிடையாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
குறட்டை விடுபவர் கருத்தில் கொள்ள வேண்டிய சில குறிப்புகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்லலாம்.
01. குறட்டை பிரச்னைக்கான முக்கிய காரணமே உடல்பருமன்தான். எனவே முறையான உணவு பழக்கம், உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைப்பது அதிக எடை கொண்ட நபர்களின் குறட்டையை குறைக்க உதவும்.
02. முதுகில் தூங்குவது குறட்டைக்கான வாய்ப்பை அதிகரிக்கும், ஏனெனில் இது தொண்டையின் பின்புறத்தில் உள்ள நாக்கு மற்றும் மென்மையான திசுக்கள் சரிந்து, சுவாசப்பாதையைத் தடுக்கிறது. உங்கள் சுவாசப்பாதையை திறந்து வைத்து குறட்டையை குறைக்க உங்கள் முகம் உள்ள பக்கத்தில் தூங்க முயற்சிக்கவும்.
03. உயரமான தலையணையை தலைக்கு வைத்துப்படுப்பதன் மூலம் குறட்டை ஏற்படுவதைத் தவிர்க்கலாம். ஒருபக்கமாக ஒருக்களித்துத் தூங்கினால் குறட்டை ஏற்படாது.
04.நீரேற்றமாக இருக்கவும், உங்கள் காற்றுப்பாதைகளை தெளிவாக வைத்திருக்கவும் நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிக்கவும்.
05. நிம்மதியான தூக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். தரமான தூக்கம் சோர்வு மற்றும் தசை தளர்வு ஆகியவற்றைத் தடுப்பதன் மூலம் குறட்டையைக் குறைக்க உதவும்.