அமேசான் பிரைமில் வெளியாகும் கங்குவா

அமேசான் பிரைமில் வெளியாகும் கங்குவா

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள படம் ‘கங்குவா’. பான் இந்தியா படமாக உருவான இப்படம் உலகம் முழுவதும் கடந்த மாதம் 14-ந் திகதி வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

குறிப்பாக படத்தின் இரைச்சல், அதீத சத்தம் எரிச்சலூட்டுவதாக விமர்சனங்கள் எழுந்தன. ‘கங்குவா’ திரைப்படத்திற்கு கிடைத்த எதிர்மறையான விமர்சனங்களால் மொத்த படக்குழுவும் அதிர்ச்சி அடைந்தனர்.

அதனை தொடர்ந்து 12 நிமிட காட்சிகளை படக்குழு நீக்கியது. இருப்பினும் இப்படத்திற்கு கிடைத்த விமர்சனங்களால் பெரிய அளவில் வசூல் ஆகவில்லை. இப்படம் மொத்தமாக ரூ. 115 கோடி வரை மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், ‘கங்குவா’ திரைப்படம் வருகிற 13-ந்திகதி முதல் ஓடிடி-யில் வெளியாக உள்ளது. அமேசான் பிரைமில் இப்படம் வெளியாகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )