மாற்றுத்திறனாளியான பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்
இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் முதல் தடவையாக விழிப்புலனற்றவர் என்ற வகையில் இலங்கை பார்வையற்ற பட்டதாரி சபையின் தலைவர் சுகத் வசந்த டி சில்வா பாராளுமன்றில் இன்று (06) தனது கன்னி உரையை நிகழ்த்தியுள்ளார்.
அவர் தனது முதலாவது பாராளுமன்ற உரையில், 76 வருடங்களின் பின்னர் மாற்றுத்திறனாளி ஒருவர் இலங்கை பாராளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளியான பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் அரச தரப்புடன் இணைந்து மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை தன்னால் நிரூபிக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இவர் இவ்வருட பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியிலிருந்து தேசியப்பட்டியல் உறுப்பினராக பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.