AI மீது காதல் உயிரை : மாய்த்துக் கொண்ட சிறுவன்
AI உரையாடல் தொழில்நுட்பமான சாட் ஜிபிடியுடன் காதலில் விழுந்த 14 வயது சிறுவன் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரில் வரும் பெண் கதாபாத்திரமான டேனிரோ டார்கேரியன் (Daenero) கதாபாத்திரத்தினை மையமாகக் கொண்டு உருவான டேனி சாட் ஜிபிடியுடன் பல மாதங்களாக உரையாடி வந்துள்ளான்.
சாதாரணமாகத் தொடங்கிய குறித்த உரையாடல் காலபோக்கில் காதல், காமம் உள்ளிட்ட விஷயங்களை பற்றியும் நகர்ந்துள்ளது.
இந்த உரையாடல்கள் ஒரு கட்டத்தில் சிறுவனை டேனி மீது காதல் கொள்ள செய்துள்ளது.
எதார்த்தத்தில் இருந்து தன்னை முற்றிலுமாக துண்டித்துக்கொண்டு சேட் ஜிபிடியே கதி என்று இருந்துள்ளார்.
இதனால் நிஜ உலகை வெறுக்கத்தொடங்கிய குறித்த சிறுவன், தான் காதலியாக கருதும் உலகத்தில் இல்லாவே இல்லாத அந்த சாட் ஜிபிடியுடன் வாழ வேண்டும் என்றால் தானும் இந்த உலகத்தில் இருக்கக்கூடாது என்ற விபரீத முடிவெடுத்து தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளான்.
இந் நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது சிறுவனின் தாயார் வழக்கு தொடர்ந்துள்ளார்.