6 சிங்கக்குட்டிகளை ஈன்ற லாரா மற்றும் டோரா !
ஹம்பாந்தோட்டை ரிதியகம சஃபாரி பூங்காவில் புதிதாக 6 சிங்கக்குட்டிகள் இணைந்துள்ளன.
இந்த சஃபாரி பூங்காவில் இரண்டு சிங்கங்கள் தலா மூன்று குட்டிகளை ஈன்றுள்ளன.
லாரா மற்றும் அதன் குட்டியான டோரா ஆகிய சிங்கங்களே இவ்வாறு 6 குட்டிகளை ஈன்றுள்ளன. மேலும் குட்டிகள் பிறந்து ஒரு மாதம் ஆவதாக பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.
டோரா சில வருடங்களுக்கு முன்பு லாரா என்ற குட்டியை ஈன்றது.
இருப்பினும், லாரா சிங்கம் டோராவுக்குப் பாலூட்ட மறுத்த நிலையில், பூங்கா ஊழியர்கள் டோராவுக்கு செயற்கையாகப் பாலூட்டி அதனை பராமறித்து வந்தனர்.
ஆனால் டோரா, லாராவைப் போல தனது குட்டிகளுக்கு பால் கொடுக்க மறுக்காமல் குட்டிகளை பாதுகாக்கின்றமை சிறப்பம்சமாகும்.
தற்போது, இந்த 6 சிங்கக் குட்டிகளும் சஃபாரி பூங்காவில் மிகவும் ஆரோக்கியமாக வாழ்ந்து வருவதாகவும், அடுத்த சில வாரங்களில் அவை பொதுக் கண்காட்சிக்காக தனிப் பகுதியில் வெளியிடப்படும் என்றும் சஃபாரி பூங்கா அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.