போர்க்குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது !
சிரியா மக்களுக்கு எதிராக சித்திரவதை மற்றும் போர்க் குற்றங்களில் ஈடுபட்ட
முன்னாள் மூத்த அரசாங்க அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
என்று சிரியா கிளர்ச்சித்தலைவர் அகமது அல் ஷாரா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
‘சிரியா மக்களை சித்திரவதை செய்வதில் ஈடுபட்ட குற்றவாளிகள், கொலைகாரர்கள், பாதுகாப்பு மற்றும் இராணுவ அதிகாரிகள் ஆகியோரை அதற்கு பொறுப்பேற்க வைக்க நாங்கள் தயங்க மாட்டோம்.
போர்க் குற்றங்களில் ஈடுபட்ட இராணுவ மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் குறித்த தகவல்களை வழங்குவோருக்கு வெகுமதியளிக்கப்படும்’ என்று அகமது
அல் ஷாரா அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.