யாழில் அதிகரிக்கும் வங்கி மோசடிகள் !

யாழில் அதிகரிக்கும் வங்கி மோசடிகள் !

யாழ்ப்பாணத்தில் தற்போது வங்கி மோசடிகள் அதிகரித்து வருவதால் வர்த்தகர்களும் பொது மக்களும் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டுமென யாழ் வணிகர் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இவ்வாறு தொடரும் மோசடிகளில் பலருடைய வங்கிக் கணக்குகளில் இருந்து பெருமளவிலான பணம் திருடப்பட்டு உள்ளதால் எச்சரிக்கையாக இருக்குமாறும் யாழ்ப்பாண வணிகர் கழகம் அறிவுறுத்தியுள்ளது.

இவ் விடயம் தொடர்பாக வணிகர் கழகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில்,

யாழ்நகர வணிகர்கள் மற்றும் பொது மக்களின் தொலைபேசிக்கு அனாவசியமாக அழைப்புக்கள் மூலம் (ரெலிகொம் என்று சொல்கிறார்கள் ) வங்கி இலக்கத்திற்கு பரிசு அனுப்புவதாக கூறி வங்கி இலக்கத்தையும் கைத் தொலைபேசிக்கு வரும் OTP (one time password -ஒரு தடவை மட்டும் பாவிக்கும் கடவுச்சொல் ) கேட்கிறார்கள்.

அதனை (6 இலக்கங்கள் கொண்டது ) சொன்னவுடன் வங்கிக்கணக்கிலுள்ள பணம் கள்வர்களால் களவாடப்படுகிறது. நம்பும் படி கதைத்து இந்த மோசடி செய்யப்படுகிறது.

குறுகிய காலப்பகுதிக்குள் அதிகளவிலான மோசடிகள் நடைபெற்றுள்ளது என்பது வங்கி முகாமையாளர்களால் எமக்கு அறியத்தரப்படுள்ளது.

எனவே அனைவரும் மிகவும் அவதானமாகவும் விழிப்புணர்வுடனும் இருக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்’ என யாழ் வணிகர் கழகம்
அறிவுறுத்தியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )