எரிபொருள் விலை குறைப்பு !

எரிபொருள் விலை குறைப்பு !

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.

இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 11 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 344 ரூபாவாகும்.

ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 41 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 379 ரூபாவாகும்.

ஒரு லீற்றர் சுப்பர் டீசலின் விலை 22 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன் அதன் புதிய விலை355 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்டோ டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

இதன்படி, ஆட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 317 ரூபாவாகவும் மண்ணெண்ணெய்யின் விலை 202 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )