சதொசவில் தேங்காய் விற்பனையின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை

சதொசவில் தேங்காய் விற்பனையின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை

லங்கா சதொச ஊடாக நாளாந்தம் விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கை நாளை (09) முதல் இரண்டு இலட்சமாக அதிகரிக்கப்படும் என வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்,”கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களில் உள்ள சதொச கிளைகளில் தேங்காய்களை கொள்வனவு செய்வதற்கான வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஒரு தேங்காய் 130 ரூபாய்க்கு விற்கப்படும்.கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக தேங்காய் உற்பத்தி தடைபட்டுள்ளது .

இதேவேளை, பண்டிகைக் காலங்களில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )