கரையோர ரயில் போக்குவரத்து தாமதம்
கரையோரப் பாதையில் ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு கோட்டைக்கு வரும் ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கல்கிசை மற்றும் இரத்மலானை ரயில் நிலையங்களுக்கிடையில் உள்ள ரயில் பாதையில் உடைந்துள்ள தண்டவாளத்தினால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், கொழும்பு கோட்டை வரை இயங்கிய அனைத்து அலுவலக ரயில்களும் தாமதமின்றி இயக்க முடிந்ததாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது
CATEGORIES Sri Lanka