மாகாண சபை தேர்தலை காலதாமதமின்றி மிகவும் விரைவாக நடத்த வேண்டும்

மாகாண சபை தேர்தலை காலதாமதமின்றி மிகவும் விரைவாக நடத்த வேண்டும்

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு, மாகாண சபைத் தேர்தலைக் காலதாமதமின்றி மிகவும் விரைவாக நடத்த வேண்டும்.” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “மாகாண சபைத் தேர்தலுக்கு அடுத்த வருட இறுதி வரை காத்திருக்காமல், உள்ளூராட்சி சபைத் தேர்தல் நிறைவடைந்த பின், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

புதிய அரசமைப்பைக் கொண்டு வருவதற்கு முன்னதாக மாகாண சபைகளை முழு அதிகாரத்துடன் இயங்கச் செய்வது முக்கியமானதாகும்.” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )