ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு விநியோகிக்கும் நேர எல்லை அதிகரிப்பு

ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு விநியோகிக்கும் நேர எல்லை அதிகரிப்பு

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், விரைவாக வழங்குவதற்கான நடவடிக்கையினை குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை விநியோகிக்கும் நேர எல்லையை அதிகரிக்கப்பட்டுள்ளதாக திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய நடைமுறையின் கீழ் வார நாட்களில் இரவு 10 மணி வரை ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்ள முடியும்.

இலங்கையில் கடவுச்சீட்டு பணிகளைத் துரிதமாக முன்னெடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )