காட்டு யானை தாக்கி ஆணொருவர் பலி
நாவுல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகஸ் பொபெல்ல பகுதியில் காட்டு யானை தாக்கி ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் போகஸ் பொபெல்ல பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடையவர் ஆவார்.
இவர் அந்தப் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார் என்று நாவுல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
CATEGORIES Sri Lanka