பிரபல உணவகத்தை 22 வரை மூடுமாறு நீதிமன்ற உத்தரவு

பிரபல உணவகத்தை 22 வரை மூடுமாறு நீதிமன்ற உத்தரவு

மட்டக்களப்பு நகரில் இயங்கி வரும் பிரபல உணவகம் சுகாதார ஒழுங்கு விதிகளை
மீறிக் கழிவு நீரை வெளியில் திறந்துவிட்ட மற்றும் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற கோழி இறைச்சியை களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை தொடர்பாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம், உணவகத்தை எதிர்வரும் 22ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடுமாறு ஞாயிற்றுக்கிழமை (18) உத்தரவு பிறப்பித்ததையடுத்து, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உணவகத்தை உடனடியாக மூடி சீல் வைத்தனர்.

உணவகத்தின் கழிவு நீர் வெளியேறி வீதிகளிலும் வடிகான்களிலும் தேங்கி நிற்பதுடன் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வருவதாகப் பொதுமக்கள் தொடர்ச்சியாக பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு முறைப்பாடு தெரிவித்து வந்தனர்.

குறித்த உணவகத்தை புளியந்தீவு பொதுச் சுகாதார பரிசோதகர் ஜெ.யசோதரன் தலைமையிலான பரிசோதகர்கள் முற்றுகையிட்டு சோதனை செய்தபோது, மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற கோழி இறைச்சியை களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை மற்றும் சுகாதார ஒழுங்கு விதிகளை மீறிக் கழிவு நீரை வெளியில் திறந்து விட்ட வந்துள்ளதையும் கண்டுபிடித்தனர்.

இந்த சுகாதார சீர்கேடு தொடர்பாக 1980ம் ஆண்டு 26ஆம் இலக்க உணவு சட்டத்தின் 13 (1) ஆம் பிரிவின் கீழ் குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது பொதுச் சுகாதார பரிசோதகர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஞாயிற்றுக்கிழமை (19) வழக்கு தாக்குதல் செய்ததுடன், குறித்த உணவகத்தின் மீது கடந்த மார்ச் மாதம் 14 ம் திகதி மனித பாவனைக்குப் பொருத்தமற்ற உணவு வைத்திருந்த குற்றச்சாட்டில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு குற்றவாளி என இனங்காணப்பட்ட தண்டப்பணம் செலுத்தினர் என நீதவானின் கவனத்திற்குக் கொண்டு வந்ததையடுத்து நீதவான் உடனடியாக குறித்த உணவகத்தை எதிர்வரும் 22ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடி சீல் வைக்குமாறு உத்தரவிட்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )