தாய்ப்பால் விற்பனைக்கு அனுமதி இல்லை

தாய்ப்பால் விற்பனைக்கு அனுமதி இல்லை

ஆன்லைன் மூலமாக தாய்ப்பால் விற்பனை செய்வது அண்மை காலமாக அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந் நிலையில் தாய்ப்பாலை பதப்படுத்தவோ அல்லது விற்கவோ அங்கீகாரம் அளிக்கவில்லை என்றும், எனவே அதற்கான உரிமங்கள் வழங்குவதை தவிர்க்க வேண்டும் எனவும் மாநில அரசுகளுக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டம், 2006 விதிகளின் கீழ் தாய்ப்பாலை பதப்படுத்துதல் அல்லது விற்பனை செய்ய அனுமதியில்லை. எனவே, தாய்ப்பால் மற்றும் அதுதொடர்புடைய பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். விதிகளை மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொது சுகாதார பாலூட்டும் மையங்கள் வழிகாட்டுதல்களின்படி, தாய்ப்பாலை எந்தவொரு வணிக நோக்கத்துக்கும் பயன்படுத்த முடியாது. சிசுக்களுக்கு மட்டுமே இது வழங்கப்பட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )